சூப்பர் ஸ்டாருடன் இணையும் யோகி பாபு…!!!

0

‘பேட்ட’ படத்தை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் ரஜினி. முதல்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்துக்கான நடிகர்கள் தேர்வை தொடங்கியுள்ளது படக்குழு.

இதில் படம் முழுக்க ரஜினியுடனே வரும் முக்கிய காமெடி கதாபாத்திரத்துக்கு யோகி பாபுவிடம் பேசியுள்ளனர். யோகிபாபு தற்போது ‘தளபதி 63’ படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். படப்பிடிப்பு எப்போது என முடிவானவுடன் கண்டிப்பாக நடிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதன்மூலம் ரஜினியுடன் முதன்முறையாக நடிக்க உள்ளார் யோகிபாபு. முன்னதாக ‘பேட்ட’ படத்தில் முனீஸ்காந்த் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் யோகிபாபுவிடம் தான் பேசினார்கள். தேதிகள் பிரச்சினையால் அவரால் நடிக்க முடியாமல் போனது.

Leave A Reply