“வர்மா” படத்தின் இயக்குனர் மாற்றம்..?

0

‘வர்மா’ படத்தின் முதல் பிரதியை தயாரிப்பாளரும், படக்குழுவினரும் திரையிட்டு பார்த்தனர். திருப்தியாக இல்லை. அதனால், பாலா இயக்கிய ‘வர்மா’ படத்தை திரைக்கு கொண்டுவர தயாரிப்பாளரும், விக்ரமும் விரும்பவில்லை.

‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை வேறு ஒரு டைரக்டரை வைத்து மீண்டும் தயாரிப்பது என்ற முடிவுக்கு தயாரிப்பாளர் வந்தார். அதற்கு விக்ரமும் சம்மதித்தார். ‘வர்மா’ படத்தை மறுபடியும் புதிய கூட்டணியுடன் தயாரிக்க இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, அந்த படத்தை கவுதம் மேனன் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதில் துருவ் கதாநாயகனாக நடிப்பார். மற்ற நடிகர்-நடிகைகள் மாற்றப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.


Leave A Reply