‘ஹீரோ’படத் தலைப்புக்கு எதிர்ப்பு…!!!

0

இரும்புத்திரை படம் மூலம் பிரபலமான பி.எஸ்.மித்ரன் இயக்கும் படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகி உள்ளார்.இப்படத்துக்கு ‘ஹீரோ’ என்று தலைப்பு வைத்து இருப்பதாக அறிவித்தனர். இந்த தலைப்பு தனக்கு சொந்தமானது என்று புதுமுக இயக்குனர் ஆனந்த் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது-

“நான் தற்போது விஜய் தேவரகொண்டா நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறேன்.படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளோம். படத்துக்கு ஹீரோ என்ற தலைப்பை தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு வருடத்துக்கு முன்பே பதிவு செய்துள்ளோம். ஆனால் திடீரென்று சிவகார்த்திகேயன் படத்துக்கு ஹீரோ என்று தலைப்பு வைத்து இருப்பதாக அறிவிப்பு வந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹீரோ தலைப்பு எங்களுக்கே சொந்தம். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.

இந்த தலைப்பை யாருக்கும் விட்டுத்தர முடியாது. இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்துக்கு கடிதம் எழுத இருக்கிறோம்.” இவ்வாறு அவர் கூறினார்.

Leave A Reply