மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சக்தி வாசு.!

0

இயக்குநர் பி.வாசுவின் மகன் நடிகர் சக்தி. இவர் சின்ன தம்பி படத்தில் சிறு வயது பிரபுவாக நடித்திருந்தார். பின்னர் தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திர வேடங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2007-ல் தொட்டால் பூ மலரும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். பின்னர் நினைத்தாலே இனிக்கும், ஆட்டநாயகன், ஏதோ செய்தாய் என்னை, தற்காப்பு, சிவலிங்கா, 7 நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியில் வெளிவந்த பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்றிருந்தார்.இந்த நிலையில், சென்னை சூளைமேடு பகுதியில் மதுபோதையில் காரை ஓட்டி வந்த நடிகர் சக்தி சாலையில் சென்றவர் மீது மோதி விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்று உள்ளார்.இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் விரட்டி சென்று அவரை பிடித்துள்ளனர். இதுபற்றி அவர்கள் போலீசாரிடமும் தெரிவித்து உள்ளனர். அண்ணாநகர் போக்குவரத்து போலீசார் சக்தியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply