வதந்தி பரப்புவோரை கிண்டல் செய்த சித்தார்த்…!!!

0

சில நாட்களுக்கு முன்பு ‘நானே சுட்டேன்’ என்ற படத்தில் சித்தார்த் நடிக்க உள்ளதாக சில வதந்திகள் வெளியாகின. இதே படத்தில் சிம்புவும், சரத்குமாரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர் என்ற வதந்தி காட்டுத்தீ போல பரவி எப்படியோ சித்தார்த்தையே எட்டிவிட்டது.

இந்த வதந்திக்கு விளக்கமளித்துள்ள சித்தார்த், “இந்த செய்தி எல்லாம் யாரோ வடை சுட்ட மாதிரி இருக்கிறது. ரூம் போட்டு யோசிக்கிறாங்களோ? இதுல நெருங்கிய வட்டம் வேற. நடத்துங்க” என்று கூறியுள்ளார்.

புதுமுக இயக்குனர் சாய் சேகர் இயக்கும் அருவம் படத்தில் தற்போது சித்தார்த் கதாநாயகனாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக கேத்தரீன் தெரசா நடிக்கிறார். திகில் படமாக விறுவிறுப்பான கதைக்களத்துடன் உருவாக்கப்பட்டு வரும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

Leave A Reply