ரன்பீருடனான breakup தான் பெஸ்ட் – கத்ரீனா கைப் ஓபன்

0

பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூரை பிரிந்தது நல்லது என்று நடிகை கத்ரீனா கைஃப் தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர் நடிகை தீபிகா படுகோனேவை பிரிந்த பிறகு நடிகை கத்ரீனா கைஃபை காதலித்தார்.திருமணம் செய்து கொள்ளாமல் இருவரும் ஒரே வீட்டில் லிவ் இன் முறைப்படி வசித்து வந்தனர். இந்நிலையில் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.ரன்பிர் கபூருடனான் காதல் முறிவை தனக்கு கிடைத்த ஆசிர்வாதமாக பார்ப்பதாக கத்ரீனா தெரிவித்துள்ளார். அவரை பிரிந்த பிறகு என்னை நானே புரிந்து கொண்டேன். இத்தனை நாட்களாக நான் என்னையே புரிந்து கொள்ளாமல் வாழ்ந்தது தெரிய வந்துள்ளது.அந்த காதல் முறிவுக்கு பிறகு என் வாழ்வில் தெளிவு ஏற்பட்டுள்ளது. நான் யோசிக்கும் விதம் என்று அனைத்துமே மாறிவிட்டது. இத்தனை நாட்களாக என்னை புரிந்து கொள்ளாமல் வாழ்ந்து வந்திருக்கிறேன். தற்போது என் வாழ்வில் நான் மட்டும் தான். அதனால் என் கவனம் எல்லாம் என் மீது மட்டும் தான் என்கிறார் கத்ரீனா.

Leave A Reply