27 வருடங்களுக்கு பின் இணையும் ஜாம்பவான்கள்…!!!

0

ரஜினிகாந்தின் அடுத்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க இருக்கிறது. படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய தேசிய விருது பிரபலம் சந்தோஷ் சிவன் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து சந்தோஷ் சிவனிடம் கேட்ட போது, அவரும் அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.இதன் மூலம் 27 வருடங்களுக்கு பிறகு ரஜினி படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி, மம்முட்டி நடிப்பில் கடந்த 1991-ஆம் ஆண்டு வெளியான தளபதி படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply