ராஜமவுலியின் ‘R .R .R’ பிரஸ் மீட்…!!!

0

ராஜமவுலி தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் நடிக்க ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். டிவிவி தானய்யா தயாரிக்கும் இதன் பட்ஜெட் கிட்டத்தட்ட ரூ. 300 கோடி என சொல்லப்படுகிறது.


இந்த படத்துக்கான அதிகாரபூர்வ பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடந்தது. இதில் ராஜமவுலி சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். ’படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரணுடன் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, டேய்சி ஜோன்ஸ், அலியா பட் ஆகியோரும் நடிக்கிறார்கள். படம் அடுத்த ஆண்டு ஜூலை 30-ந் தேதி உலகம் முழுவதும் 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது.

படத்தின் கதை சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எழுதப்பட்டது.படத்தின் தலைப்பு இப்போதைக்கு ‘ஆர் ஆர் ஆர்’ என்றே இருக்கும். ஒவ்வொரு மொழிக்குமான விரிவாக்கம் பின்னர் வெளியிடப்படும்’ ஆகிய அறிவிப்புகள் இன்று வெளியாகின.


Leave A Reply