ரசிகர்களுக்கு ஓவியாவின் கருத்து…!!!

0

ஓவியா நடிப்பில் 90 ml படத்தில் ஆபாசம் அதிகமாக இருப்பதாகவும் எதிர்ப்புகள் தோன்றின. பிக்பாஸ் மூலம் கிடைத்த புகழை கெடுத்துக்கொண்டார் என்று விமர்சனங்கள் பரவின.


இதுபற்றி ஓவியாவிடம் கேட்டோம்.

“சமூகத்தில் இருப்பவர்களின் பிரதிபலிப்பு தான் படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்கள். படத்தில் நடிப்பதற்கும் தனிப்பட்ட ஒருவரின் தன்மைக்கும் தொடர்பு இல்லை.

தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது? சினிமாவில் நல்லவர்களாக நடிப்பார்கள். பின்னர் அதையே வைத்து அரசியலுக்கு வந்து ஆட்சியை பிடிப்பார்கள். இது சினிமா. சினிமாவை சினிமாவாக மட்டுமே பார்க்க தொடங்குங்கள். என்னை ஓவியாவாக பாருங்கள். படத்தில் வரும் கதாபாத்திரங்களோடு சேர்த்து குழப்பி கொள்ளாதீர்கள்”.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave A Reply