அருள்நிதி,ஜீவாவுடன் இணையும் மஞ்சிமா மோகன்…!!!

0

கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் `தேவராட்டம்’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள மஞ்சிமா மோகன் அடுத்ததாக ஜீவா, அருள்நிதி இணைந்து நடிக்கும் புதிய படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார்.

ஜீவாவின் குடும்ப தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பாக ஜித்தன் ரமேஷ் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார். ஜீவா, அருள்நிதி இணைந்து நடிக்கும் இந்த படத்தை `மாப்ள சிங்கம்’ படத்தை இயக்கிய ராஜசேகர் இயக்கவுள்ளார்.

நட்பை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் கதாநாயகியாக மஞ்சிமா மோகன் இணைந்துள்ளார். இரண்டு கதாநாயகர்களில் மஞ்சிமா யாருக்கு ஜோடியாக நடிக்கிறார் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

Leave A Reply