நானும் அனிஷாவும் காதலிக்கிறோம்- விஷால் அறிவிப்பு.!

0

நடிகர் விஷால் தமிழ்திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருகிறார். திருமணம் செய்யாமல் இருந்து வந்தார், திருமணம் பற்றி கேட்ட போது, நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிந்ததும்தான் திருமணம் செய்வேன் என்றும், நடிகையை காதலித்து வருவதாகவும் அவரையே திருமணம் செய்வேன் என்றும் பலவாறு கூறிவந்தார்.

தற்போது முதல் முறையாக அவரே தனது திருமண தகவலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளார். மணமகள் பெயர் அனிஷா ரெட்டி. ஆந்திரா – தெலுங்கானா மாநில தலைநகரான ஐதராபாத்தைச் சேர்ந்தவர். தொழில் அதிபர் விஜய் ரெட்டி-பத்மஜா தம்பதியின் மகள் ஆவார். அனிஷா ரெட்டிக்கும் எனக்கும் திருமணம் என்ற தகவல் உண்மைதான். இது காதல் திருமணம். நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக கூறுவது தவறு. நாளை (வெள்ளிக்கிழமை) தான் எனது பெற்றோரும் அனிஷா பெற்றோரும் சந்தித்து பேசுகிறார்கள். இதில் நிச்சயதார்த்தம் மற்றும் திருமண தேதி முடிவு செய்யப்படும்.நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பின்புதான் எனது திருமணம் நடக்கும் என்று கூறினேன். அதில் மாற்றம் இல்லை. கண்டிப்பாக நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கப்படும். அதன்பிறகு அனிஷாவை திருமணம் செய்வேன். திருமணம் சென்னையில் தான் நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார் .

Leave A Reply